யானைகள் மிதித்ததில் 17 பேர் காயம்

இலங்கை தலைநகர் கொழும்பு கோட்டையில் நடநத் பெரஹெரா திருவிழாவில், திடீரென இரண்டு யானைகளுக்கு மதம் பிடித்ததால், 17 பேர் காயம் அடைந்தனர்.

பெரஹெரா அணிவகுப்பு விகாரையை நெருங்கிய போது, இரு யானைகளுக்கு திடீரென மதம் பிடித்து தெருக்களில் தெறித்து ஓடின.

இந்த விபத்தில் காயம் அடைந்த 12 பெண்கள் உள்பட 17 பேரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்