யமஹா ஊழியர்கள் போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் யமஹா மோட்டார் வாகனத் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.

இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்காக ஒரு தொழிற் சங்கம் உருவாக்கப்பட்ட நிலையில் அதன் பிரதிநிதிகள் தொழிலாளர் நல வாரிய அலுவலக அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியே, தொழிலாளர் நலம் குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று நிறுவாகத்தை வலியுறுத்தினர்.

இதற்கு யமஹா நிறுவனம் மறுத்து, சம்பந்தப்பட்ட தொழிலாளர்களை பணி நீக்கம் செய்தது.

சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட்டு வந்த தொழிற் சங்க நிர்வாகிகளை நீக்கம் செய்த விவகாரம், தொழிலாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதைக் கண்டித்து யமஹா நிறுவன ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்