மோடியை டிவிட்டர் பக்கத்தில் 5 கோடி பேர் பின் தொடர்கிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடியை தற்போது டிவிட்டர் பக்கத்தில் 5 கோடி பேர் பின்தொடர்கிறார்கள். நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாட டிவிட்டர் சமூக வலைத்தள பக்கத்தை அதிகளவில் பயன்படுத்தி வருகிறார்.

இந்நிலையில், அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 5 கோடியாக உயர்ந்துள்ளது. எனினும் மோடியை பின் தொடர பல்வேறு போலி கணக்குகள் உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

உலகளவில் உள்ள பிரபலமான தலைவர்களின் அமெரிக்க அதிபர் டிரம்பை அதிகபட்சமாக 6 கோடியே 30 லட்சம் பேர் டிவிட்டரில் பின் தொடர்கின்றனர்.