மே 15 ம் தேதி சர்வதேச குடும்ப தினம்

🎯ஹைடெக் என்ற பெயரில் போனிலுள்ள வாட்ஸ் குரூப்-பில் முழிக்க ஆரம்பித்து அதிலேயே உறங்கும் போக்குக் கொண்ட தற்போதைய நவீன உலகில் வாழ்வாதாரத்திற்காக சொந்த இடங்களை விட்டு வெவ்வேறு இடங்களில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது.இதையொட்டி குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக இருப்பது அரிதாக உள்ளது. அதனால் குடும்ப கட்டமைப்பிலும் “விரிசல்’ உருவாகிறது. இதையொட்டி ஒவ்வொருவரும் குடும்பத்துக்கு முக்கியத்துவம் தர வலியுறுத்தி இதே மே 15 ம் தேதி சர்வதேச குடும்ப தினம் கடைபிடிக்கப்படுகிறது. ”

உலகளவில் சொந்த இருப்பிடத்தை விட்டு உள்நாட்டுக்குள் மட்டுமல்ல அல்ல, வெளிநாடுகளிலும் இடம் பெயர்ந்துள்ளனர். இவர்களது குடும்பம் இவர்களை சார்ந்து உள்ளது. என்ன தான் இவர்கள் குடும்பத்திற்கு வருமானத்தை அங்கிருந்து அளித்தாலும், அருகில் இல்லாதது அவர்களது குடும்பங்களுக்கு ஏமாற்றமாகவே இருக்கும். குடும்பங்களுக்குள் ஒற்றுமை இருக்கும் வரை வாழ்க்கையில் கவலை இருப்பதில்லை.

ஆனால் ஒருவர் எந்த சூழ்நிலையிலும், எந்த வயதினிலும், எவருக்காகவும், குடும்பத்தை கைவிடாமல் ஆதரவளிக்க வேண்டும் என்பதை இத்தினம் வலியுறுத்துகிறது. தனிக்குடும்ப வாழ்க்கை, விவாகரத்துகள், தாய், தந்தை இல்லாத குழந்தைகள், ஒருங்கிணைப்பு இல்லாத குடும்பங்கள் போன்றவை அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதை தடுப்பதற்கு குடும்பங்களின் ஓற்றுமை அவசியம்.

சிம்பிளாக சொல்வதானால் சிட்டுக்குருவிக்கும் சிறு கூடு உண்டு. குடும்பத்திற்காக கூடு அமைத்து, அதில் தன் குஞ்சுகளை குடியேற்றும். இரையை தேடிச் சென்று வாயில் கவ்வி, குஞ்சுகளுக்கு ஊட்டி மகிழ்ந்து, சுகமான குடும்ப பந்தத்தை அனுபவிக்கும். சந்தோஷங்கள், சிறு சிறு சண்டைகள், சமாதானங்கள் என அனைத்தும் நிறைந்த அற்புத அமைப்பு குடும்பம். அது அனைத்து உறவுகளும் சங்கமித்திருக்கும் சமுத்திரம்.

ஆனால் இன்று கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து… தனிக் குடும்பங்களாய் பிரிந்து வாழ்கிறோம். காலத்தின் கட்டாயமாய்… பொருளாதாரத் தேடலுக்காக உறவுகளை பிரிந்திருந்தாலும், அவ்வப்போது கூடி மகிழ்ந்து உறவைப் போற்றுவோம். 💕

💥பி.கு: வாட்ஸ் அப் குரூப்-பில் ஃபேமிலியை ஒன்று சேர்த்து வைத்துக் கொண்டு வாழ்த்து அல்லது சேதியை பரிமறுவதை இன்னிக்கு அவய்ட் பண்ணிட்டு நேரில் சந்திக்க முயலுங்களேன்