மெட்ரோ ரயில் கட்டணம் குறையாது …. நிர்வாக இயக்குனர்

சென்னை வண்ணாரப்பேட்டை – டிஎம்எஸ் இடையேயான 10 கி.மீ., சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, அங்கு ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. ஆய்வுக்கு பிறகு செய்தியாளர் களிடம் பேசிய மெட்ரோ ரயில் பாதுகாப்பு கமிஷனர் மனோகரன், 3 நாட்கள் ஆய்வுகள் நடத்தப்பட்டு அதன் பிறகு சான்றிதழ் அளிக்கப்படும் என்றார்

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சால், மெட்ரோ ரயில் இயக்கும் நேரம் அதிகரிப்பது குறித்து ஆய்வு நடந்து வருகிறது. ரயில் நிலையங்களில் வைபை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும். மெட்ரோ ரயில் கட்டணம் குறைக்கப்பட மாட்டாது. மெட்ரோ ரயில்களில் உள்ள குறைகள் விரைவில் சரிசெய்யப்படும் என்றார்.