மெக்கா, கோலாலம்பூரில் நிரவ்மோடிவின் நகைக்கடை திறப்பு

பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் நடந்த மோசடியில் தொடர்புடைய மும்பை வைர வியாபாரி மீது ஜனவரி 31-ம் தேதி சிபிஐ வழக்குப்பதிவு செய்து, ‘லுக்-அவுட்’ நோட்டீஸ் விடுத்தது.

ஆனால் நிரவ் மோடி, அவருடைய குடும்பத்தார் மற்றும் கூட்டாளிகள் நாட்டை விட்டு ஜனவரி மாத தொடக்கத்திலே சென்றுவிட்டனர் என தெரியவந்து உள்ளது. இந்திய லுக்-அவுட் நோட்டீஸ் விடுத்து இருந்த நிலையில் நிரவ் மோடியின் நகைக்கடை மெக்காவில் பிப்ரவரி 9-ம் தேதி திறக்கப்பட்டு உள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி தொடர்பாக அவருக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்த பின்னர் மெக்கா மற்றும் கோலாலம்பூரில் அவருடைய நகைக்கடையின் கிளைகள் திறக்கப்பட்டு உள்ளது