மு.க.ஸ்டாலின் – கருணாஸ் திடீர் சந்திப்பு

கடந்த சில நாட்களாக ஊடகங்களின் தலைப்பு செய்தியில் இடம்பெற்றிருந்த திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ மற்றும் காமெடி நடிகருமான கருணாஸ், சமீபத்தில் சென்னை வடபழநியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சற்றுமுன் சென்னை கோபாலபுரம் வீட்டில் தலைவர் ஸ்டாலினுடன் எம்.எல்.ஏ கருணாஸ் சந்திப்பு நடந்தது. இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்பட்டாலும் சமீபத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து ஸ்டாலினுடன் கருணாஸ் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

karunas

அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கருணாஸ், அதிமுகவுக்கு எதிராக அரசியல் செய்யும் டிடிவி தினகரன் மற்றும் திமுகவுக்கு ஆதரவாக நடந்து கொள்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.