முஸ்லிம்கள் 2 குழந்தைகளோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்: பாஜக

ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக எதிர்கட்சித் தலைவராக உள்ள குலாப் சந்த் கடாரியா, உதய்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியதாவது: தேசத்தின் மோசமான நிலைக்கு முஸ்லிம் மக்கள் தொகையே பொறுப்பாகும்.

இதற்கான சட்டத்தை மாற்றியமைக்க வேண்டியது அவசியம். நாங்கள் (இந்துக்கள்) இரண்டு குழந்தைகளுக்கு எங்களைக் கட்டுப்படுத்தினால், அவர்களும் (முஸ்லிம்கள்) இரண்டோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

முஸ்லிம் மக்கள் தொகை என்ற ஒரு காரணத்தால் வளர்ச்சிக்காக நாம் முன்னெடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாகின்றன. திருத்தங்களைக் கொண்டு வந்தோ அல்லது அதை மாற்றுவதன் மூலமோ சட்டங்களைச் சரியாக ஒழுங்கமைக்கப்படவில்லை என்றால் அடுத்து வரும் 50 ஆண்டுகளில் மக்கள் தொகை மேலும் மிதமிஞ்சி மிக மோசமான நிலையை அடையும்.

சட்டத்தை இயற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் நாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்தால் மட்டுமே சட்டத்தை மாற்ற முடியும் என்கிற விதியையும் மாற்ற வேண்டிய அவசரத் தேவை உள்ளது” இவ்வாறு கடாரியா பேசினார்.