முன்னாள் அமைச்சர்  மரணம்

கடலூர் வண்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜாங்கம். இவர் 1974-ம் ஆண்டில் தி.மு.க. ஆட்சியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக இருந்து வந்தார்.

பின்னர் அ.தி.மு.க.வில் இணைந்தார்.  .1984-1990 வரை அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார்.  கடந்த 15 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்தார். ராஜாங்கம் உடல்நலக்குறைவு காரணமாக கடலூர் தனியார் மருத்துவ மனையில் உயிரிழந்தார். இவர் 1962ம் ஆண்டு முதல் 3 முறை குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர்

இவரது உடல் கடலூர் வண்டிப்பாளையத்தில் இருந்து நாளை (25.01.2018) பிற்பகல் அடக்கம் செய்யப்பட உள்ளது.