முதல் நாளில் 13.5 கோடி வசூலித்த சீமராஜா

பொன்ராம் இயக்கத்தில் டி.இமான் இசையில் வெளிவந்துள்ள சீமராஜா படத்திற்கு முதல் நாள் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.  படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24ஏ.எம். ஸ்டூடியோஸ் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
மேலும் சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் சாதனைகளையும் சீமராஜா முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது. 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தகவல்படி, முதல் நாள் வசூலே 13.5 கோடி ஆனதாக கூறப்படுகிறது. முதல் நாள் வசூலே 13.5 கோடி என்பது பெருமைக்குரியது, சாதனைக்குரியது. 550 காட்சிகள் திரையிடப்பட்டு உள்ளன. இந்த எண்ணிக்கை இந்த வார இறுதிக்குள் மேலும் கூடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *