முதல்வரிடம் விருது பெறும் நெல்லை தம்பதி

நெல்லை மாவட்டம் கடையம் முகமூடி கொள்ளையர்களை விரட்டியடித்த முதிய தம்பதிகளான சண்முகவேல்-செந்தாமரை ஆகியோர் இன்று சென்னை செல்கின்றனர்.

இன்று மாலையில் தலைமை செயலாளரை சந்திக்கின்றனர். அவர்களுக்கு நாளை சுதந்திர தின நிகழ்ச்சியில் முதல்வர் விருது வழங்கி பாராட்டுவார் என தெரிகிறது.இந்த தம்பதிகளை அம்பாசமுத்திரம் தாசில்தார் வெங்கடேஷ் சென்னைக்கு அழைத்துச் செல்கிறார்.