முதல்வராக நினைக்கும் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை நடத்தலாமா…?

அதிமுகவுடன் கூட்டணி வைத்ததை கண்டித்து, பாமக மாநில நிர்வாகியாக இருந்த ராஜேஸ்வரி பிரியா அக்கட்சியில் இருந்து விலகி தனியாக கட்சி தொடங்க உள்ளதாக அறிவித்ததுடன் ஒரே நாளில் கட்சி ஆரம்பித்து, ‘‘அனைத்து மக்கள் அரசியல் கட்சி’’ என்ற பெயரையும், கொடியையும் அறிமுகப்படுத்தி. பரபரப்பை ஏற்படுத்தியவர் இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜேஸ்வரி பிரியா, 60 ஆண்டு காலமாக கலைத்துறையில் இருக்கும் கமலஹாசன் இத்தகைய நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அவசியம் என்ன தொடர்ந்து இரண்டு வருடமாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை எதிர்த்து நான் போராடி வருகிறேன் என்றும், மூத்த நடிகராகவும்,நாளை தமிழகத்திற்கு முதல்வராக நினைக்கும் கமல்ஹாசன் இத்தகைய நிகழ்ச்சியை நடத்தி வருவது வருத்தம் அளிக்கிறது என்றும் அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியை நடத்தும் கமலஹாசன் அவர்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன் சமுதாயத்தை சீர்குலைக்கும் விதத்தில் இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்கள்.
இதற்கு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பத்தாரும் சேர்ந்து எதிர்த்து போராட வேண்டும்.இன்று நடந்து கொண்டிருக்கும் ஆணவ படுகொலைகள் பற்றி கமலஹாசன் அவர்களால் பேசமுடியுமா..காதலுக்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிடையாது ஆனால் அந்த காதலையே கொச்சைப்படுத்தி அந்த நிகழ்ச்சியில் ஒளிபரப்பு செய்கிறார்கள் இதற்கு மேல் நாட்டின் பிரச்சனையை பற்றி பேச கமலஹாசன் அவர்களுக்கு எந்த தகுதியும் இல்லை அதற்கு மேல் அவர் பேசினால் அதனை நாங்கள் வன்மையாக கண்டிப்போம். அபாசனமான உடைகளை அணிந்து நடிப்பதால் இளைஞர்கள் மனதை பெருமளவில் பாதிப்பு அடைகிறது. சின்னத்திரையில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் சென்சார் போர்ட் கட்டாயம் அமைக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். இந்த போராட்டத்தில் 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோஷம் எழுப்பினர்.