முகமது அசாருதீன் பெர்த் டே டுடே

முகமது அசாருதீன்) இந்திய அணியின் முன்னாள் தலைவர், மட்டையாளர் மற்றும் அரசியல்வாதி. 1984 இல் தேர்வு போட்டிகளில் அறிமுகமாகிய அசாருதீன் தன் முதல் மூன்று தேர்வுப் போட்டிகளிலும் சதங்களைப் பெற்றார்.

இச்சாதனை இன்றுவரை வேறெவராலும் எட்டப்படவில்லை. வலது கைத் துடுப்பாளரான இவர் 99 தேர்வுப் போட்டிகளில் 22 சதங்கள் உட்பட 6215 ஓட்டங்களைப் (சராசரி 45.03) பெற்றுள்ளார்.

துடுப்பாட்ட சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு இவருக்கு பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை தடை விதித்தமையால் நூறாவது தேர்வுப் போட்டியில் ஆடும் வாய்ப்பை இழந்தார்.

இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளராக உத்திரப் பிரதேசத்தின் மொராதாபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்