முகத்தை மறைத்த மெரினா

கனமழையின் காரணமாக மெரினா கடற்கரை கூட கடல் போலவே காட்சியளிக்கிறது. சென்னையில் நேற்று இரவு மழை விடிய விடிய வெளுத்து வாங்கியது மழை தொடர்ச்சியாக பெய்ததால் கடற்கரையே தெரியாத அளவுக்கு மழை நீர் சூழ்ந்துள்ளது. மெரினா கடற்கரை கடல் போன்றே காட்சியளிக்கிறது. கடைகள் அனைத்தும் மழை நீரால் சூறையாடப்பட்டுள்ளன. மேலும், போக்குவரத்தும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.