மீன்வளக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கன்னியாகுமரியில் புதியதாக தனியார் சுயநிதி மீன்வளக் கல்லூரி தொடங்க வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி பொன்னேரி மீன்வளக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் குறித்து கேள்வி எழுப்பியதற்காக தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் இடை நீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள் 11 பேர் மீதான நடவடிக்கையை திரும்ப பெற்று மீண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்