மீன்களை காக்கும் கயல்

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறையில் சுற்றுச்சூழல் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அங்குள்ள வன உயிரின விளக்க மையத்தில் நன்னீர் மீன்களை காப்பதற்காக கயல் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

கயல் மைய பணிகள் முடிவுறாத நிலையில் அதற்கான சோதனை முறையிலான இயக்கத்தை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தொடங்கி வைத்தார். கயல் மையமானது இன்னும் ஒரு மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படவுள்ளது.