மீண்டும் சீட் கிடைக்காத ஆத்திரம்: ராஜஸ்தான் அமைச்சர் ராஜினாமா

ராஜஸ்தானில் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காததால் பா.ஜ. முன்னாள் அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் மொத்தமுள்ள 200 உறுப்பினர்களுக்கான தேர்தல் டிச.7-ம் தேதி நடைபெறுகிறது.
நேற்று பா.ஜ. தனது 131 வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் தற்போதைய அமைச்சரும் ஜெயித்ரான் தொகுதி எம்.எல்.ஏ.வுமான சுரேந்திரா கோயலுக்கு மீண்டும் போட்டியிட சீட் தரவில்லை. அத்தொகுதிக்கு அவினாஷ் கெலாட்டிற்கு சீட் தரப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த சுரேந்திரா கோயல் நேற்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். கட்சி மாநில தலைவரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார்.