மாநிலங்களவை தேர்தல் 7 பேரின் மனுக்கள் ஏற்பு

தமிழகத்தில் மாநிலங்களவை தேர்தலில் காலியாகவுள்ள 6 இடங்களுக்கு 7 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. சுயேச்சை வேட்பாளர்கள் 4 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

வைகோ, சண்முகம், வில்சன், என்.ஆர்.இளங்கோ, அன்புமணி, சந்திரசேகரன், முகமத் ஜான் ஆகியோரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டன.

வைகோ மனு ஏற்கப்பட்டதால் என்.ஆர்.இளங்கோ 11ம் தேதி வேட்பு மனுவை திரும்பப் பெறுகிறார்.