மல்லையா-ஜெட்லி சந்திப்பு … மோடி நடவடிக்கை என்ன?

மோடி அரசுக்கு ஏற்பட்ட பல கலங்கத்தில் விஜய் மல்லையாவின் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது அப்பட்டமாக குற்றவாளி என தெரிந்தும் கையை பிசைந்து நின்ற காரணத்தை இதுவரை நாட்டு மக்கள் அறியவில்லை.

வங்கி கடன் கட்டாத அப்பாவி விவசாயிகள் மீது ஜப்தி நடவடிக்கை எடுக்க தெரிந்த வேகம், விவேகம் மல்லையாவின் கைது நடவடிக்கையில் ஏன் காட்டவில்லை என தெரியவில்லை. நாடு முழுவதும் மல்லையா விஷயத்தில் ஏன் கைது நடவடிக்கை இல்லை என்ற கேள்வி நாலாபுறத்திலும் இருந்து துளைத்தெடுத்தது.

அதனாலேயே, விஜய் மல்லையா லண்டனில் கைது செய்யப்பட்டபோது, மோடி அரசு அதனை தன் ஆட்சியின் ஒரு பெரிய சாதனையாகவும் வெற்றியாகவும் சித்தரிக்க முயன்றது. ஆனாலும் வழக்கம்போல் மல்லையா கொஞ்ச நேரத்திலேயே ஜாமீனில் வந்து அனைவருக்கும் டாடா காட்டிவிட்டு போய்விட்டார்.ராஜவாழ்க்கை ஆனால் அவர் ஏமாற்றி சென்றது ஒன்றிரண்டு ரூபாய் இல்லை. 9000 கோடி ரூபாய். பொதுத்துறை வங்கியில் கடனை வாங்கிவிட்டு திருப்பி செலுத்தாத பெரிய மனுஷன் இந்த மல்லையா. வாங்கிய கடனை கேட்டால் சொல்லாமல் கொள்ளாமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு நாட்டு மக்கள் கண்களில் விரலை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார்.

இவரை இந்தியா அழைத்து வர இங்கிலாந்தின் உதவியை மத்திய அரசு கேட்டிருக்கிறது. ஏன் உதவி கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்? நேரடியாகவே போய் கைது செய்திருக்க வேண்டியதுதானே? கேட்டால் சட்டசிக்கல், நாட்டு விதிமுறைகள் என்கிறார்கள். ஆனால் மல்லையாவோ பொது நிகழ்ச்சிகள், கிரிக்கெட், டென்னிஸ் என அந்த நாட்டில் ராஜவாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.நான் பலிகடா தான்எனினும் இதற்கான வழக்கு ஒன்று வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இதற்காக கோர்ட்டுக்கு மல்லையா வந்து ஆஜரானார்.

பிறகு அவரை பத்திரிகையாளர்கள் சுற்றிக் கொண்டு கேள்விகளால் துளைத்தெடுத்தனர். அதற்கு மல்லையா சொன்ன கூல் பதில், “நாட்டை விட்டு வெளியேறும் முன்னர் நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லியை நேரில் சந்தித்து நிலைமையை விளக்கிக் கூறினேன். மிக விரைவில் கடன்கள் அனைத்தையும் திருப்பி அடைக்க உள்ளேன். நாட்டில் உள்ள இரண்டு கட்சிகளுக்கும் என்னை பிடிக்கவில்லை. நான் பலிகடாதான், அதனை உணர்கிறேன் ” என்றார்.ராகுல் விளாசல்ஏற்கனவே ஆளும் பாஜகவுக்கும் மல்லையாவுக்கும் நெருக்கம் அதிகம் என்பதை இந்திய மக்கள் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள்.

இப்போது இந்த வரிகளை சொல்லி திருவாய் மலர்ந்துவிட்டு போய்விட்டார் மல்லையா. அருண்ஜெட்லி வசமாக மாட்டிக் கொண்டார். இந்த விஷயத்தில்தான் இந்திய அரசியலில் மீண்டும் புயல்வீச தொடங்கி உள்ளது. கிட்டத்தட்ட இந்திய அரசியல் தலைவர்கள் எல்லோருமே இதனை கிண்ட ஆரம்பித்துவிட்டார்கள். முதலில் ஆரம்பித்ததே ராகுல்தான். “ஜெட்லியும், மல்லையாவும் பாராளுமன்றத்தில் 15 நிமிடங்களுக்கும் மேலாக பேசியதற்கான ஆதாரங்கள் இருக்கிறது. ஆனால் இது குறித்து வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ-யில் ஜெட்லி ஏன் இதுவரை விளக்கம் தரவில்லை,

அருண் ஜெட்லி பதவியில் இருந்து விலக வேண்டும்” என்று விளாசி உள்ளார்.சவால் விடுத்த புனியாராகுல் கேள்வி கேட்டது போதாதென்று, காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரான எம்.பி. புனியா என்பவர், “நானும்தான் அவங்க ரெண்டு பேர் பேசுவதை பார்த்தேன். பேசாமல் சிசிடிவி ஃபுட்டேஜ் எடுத்தால் தெரிந்துவிடும், ஒருவேளை நான் சொல்றது பொய்ன்னு நிரூபித்தால், அரசியலில் இருந்தே வெளியே போய்விடுகிறேன்” என்று சவாலே விடுத்துள்ளார்.

2 விஷயங்கள் இதைவித பெரிய தலை ஒன்று இந்த விவகாரத்தை கிண்ட ஆரம்பித்துவிட்டது. அது சாட்சாத் சுப்பிரமணியசாமியேதான். சும்மாவே எதையாவது பேசி ட்வீட்டரையே சூடாக்கிவிடுவார். இப்போது ஜெட்லி விவகாரம் இவருக்கு கிடைத்துவிட்டது. “மல்லையா விவகாரத்தில் 2 விஷயங்களை மறக்க முடியாது. ஒன்று மல்லையாவுக்கு கொடுக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ் சிலரது உத்தரவால் நீர்த்து போக செய்யப்பட்டுள்ளது, மற்றொன்று நிதியமைச்சரை சந்தித்து வெளிநாடு செல்வதை தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார் மல்லையா” என்று ஒரே போடாக போட்டுவிட்டார்.

அசராத அருண்ஜெட்லிஆனால் இவ்வளவு பேர் இத்தனை குற்றச்சாட்டு சொல்லியும் அருண்ஜெட்லி அசரவே இல்லை. இதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள், மல்லையாவை சந்தித்து பேசினீர்களா என்று பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்டனர். அதற்கு ஜெட்லி, “மல்லைய்யாவை நேரில் சந்திப்பதற்கு அப்பாய்ண்ட்மெண்ட் எதுவும் நான் தரவில்லை. ஒரே ஒரு முறை பாராளுமன்ற வளாகத்தில் இருக்கும் என்னுடைய அலுவலகத்திற்கு நான் செல்லும் போது ராஜ்ய சபா உறுப்பினர் என்ற முறையில் என்னை சந்தித்தார்.அறிவுரை கூறினேன்

பின்னர் தன்னுடைய கடன்கள் அனைத்தையும் திருப்பி செலுத்த விரும்புவதாக கூறினார். அவ்வளவுதான், இப்படி கேட்பது தவறு என்று எனக்கு தோன்றவில்லை. நான் அவரிடம் “இதை உங்களுக்கு கடன் கொடுத்த வங்கி நிர்வாகிகளிடம் போய் கூறுங்கள்” என்றேன். ஏனெனில் மல்லைய்யா நிறைய முறை இப்படியான போலி வாக்குறுதிகள் பலமுறை கொடுத்திருந்ததால்,

இந்த இந்த அறிவுரையை நான் வழங்கினேன்” என்றார்.பதவி நீக்கமே சிறந்ததுஆனால் ஜெட்லி சொன்ன இந்த காரணங்களை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பதே நிதர்சனம். ஊழல் புரிந்துவிட்டு, நாட்டை விட்டு ஓடியவர் எதற்காக நிதி அமைச்சரை நேரில் பார்த்து பேச வேண்டும் என்பதுதான் அனைத்து தரப்பினரின் ஒரே கேள்வியாக இருக்கிறது.

இந்த குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் நிதியமைச்சர் பதிலளித்தே ஆகவேண்டும். அல்லது என்னதான் இருதரப்பிலும் பேசிக் கொண்டனர் என்ற உண்மையையும் ரகசிய பேச்சுவார்த்தையையும் விளக்க வேண்டும். அல்லது பிரதமர் மோடி சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் அல்லது ஜெட்லியை பதவி நீக்கமாவது செய்ய மோடி முன்வரவேண்டும் என நடுநிலையாளர்கள் விரும்புகின்றனர்