”மலை”க்க வைக்கும் ”மலை” ரயிலின் கட்டணம்

சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள் தோறும் மேட்டுப்பாளையத்தில் இருந்து மலை ரயில் இயக்கப்படுகிறது.

யுனெஸ்கோவால் பாரம்பரிய சின்னம் என்ற அங்கீகாரம் அளிக்கப்பட்ட ஊட்டி மலை ரயில் ஊட்டியிலிருந்து குன்னுார் வரை டீசல் இன்ஜின் மூலமும், குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் வரை நீராவி இன்ஜின் மூலமும் மலை ரயில் இயக்கப்படுகிறது.

அந்த வகையில் ஊட்டியில் இருந்து லவ்டேல், கேத்தி, குன்னுார் வரை முன்பதிவு செய்யாமல் பயணிக்கும் பயணிகளுக்கு, மலை ரயில் கட்டணம் ரூ. 10 ஆகவும், முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கு கட்டணம் ரூ. 25 ஆகவும், ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் பயணிகளுக்கு முன்பதிவு செய்யாத கட்டணம் ரூ. 25, முன் பதிவு செய்து பயணிப்பவர்களுக்குக் கட்டணம் ரூ.30 ஆகவும் தற்போது நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில்  இத்தொகையால் ரயில்வே நிர்வாகத்துக்கு ஆண்டுக்கு ரூ. 24 கோடி இழப்பு ஏற்படுவதால் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது

கட்டண உயர்வு விபரம்:
மேட்டுப்பாளையம் <=> உதகை :

முதல் வகுப்பு கட்டணம் – 195 ரூபாயில் இருந்து 395 ரூபாயாக உயர்வு.

2ம் வகுப்பு முன் பதிவு கட்டணம் – 30 ரூபாயில் இருந்து 130 ரூபாய் உயர்வு

முன் பதிவற்ற 2ம் வகுப்பு கட்டம் 15 ரூபாயில் இருந்து 75 ரூபாய் உயர்வு

மேட்டுப்பாளையம் <=> குன்னூர் 

முதல் வகுப்பு கட்டணம் 174‌ ரூபாயில் ‌இருந்து 295 ரூபாயாக உயர்வு.

2ம் வ‌குப்பு முன்பதிவு கட்டணம் 25 ரூபாயில் இருந்து ‌85 ரூபாயாக உயர்வு.

2ம் வகுப்பு முன்பதிவற்ற கட்டணம் 10 ரூபாயில் இருந்து 45 ரூபாயாக உயர்வு.

உயர்த்தப்பட்ட கட்டணம் அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்  கனமழை காரணமாக 3 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் சேவை இன்று மீண்டும் தொடங்கியது.  பயணிகள் ரயில் கட்டண உயர்வு கேட்டு அதிர்ச்சி அடைந்தனர்.