மலரும் ஏர்செல் நினைவுகள்..!

முதன்முதலில் வந்த மொபைல் நெட்வொர்க் BPL….!
அப்போது இருந்த ஒரே நெட்வொர்க் அது தான்…! மோனோபோலி…!
1996 இறுதியில்,
இன்கமிங்கிற்கே நிமிடத்திற்கு எட்டு ரூபாய்..!

நோகியோ செல்போன் இரண்டு கடிகார பேட்டரி செல்கள் போட்டுக் கொள்ளும் வசதி கொண்டு செங்கல் அளவில் இருக்கும்…!

பல இடங்களில் டவர் எடுக்காது..! கட்டைச் சுவர், மரக்கிளைகள், மொட்டை மாடியில் ஏறி நின்று, ஹலோ ..! ஹலோ…! கத்திக்கிட்டுத் திரியணும்..!
டவர் கட்டானாலும் எட்டு ரூவா காலி…!

பேஜர் என்ற பேஜார் ஒன்றைத் தூக்கி அலைந்த ஒரு இருண்ட காலமும் உண்டு..!

1998 ல் அடியெடுத்து வைத்த ஏர்செல்காரன் நிச்சயமாக ஒரு வரம்..!

இன்கமிங் ஃப்ரீ, அவுட் கோயிங் ஏர்செல் to ஏர்செல் ரு1.40, ஏர்செல் to மற்றவை ரூ2.80…!

அப்போது சிம்கார்டு 3750 ரூபாயோ, என்னவோ..? மாத வாடகை 675..! கால் சார்ஜ் தனி..!

அன்று 9500 ரூபாய் விலையில் கிடைத்த நோகியோ 5110 கொம்பு வைத்த செல் வெகு பிரபலம்…!

அன்று மேல் பாக்கெட்டில் செல் வைத்து இருப்பதே ஒரு பெரிய ஸ்டேட்டஸ் சிம்பல் ஆகும்..!

இருபது வருடங்களாக ஏர்செல் என் உடன் இருந்து வந்துள்ளது..!

நல்லது, கெட்டது என எல்லா நிகழ்வுகளிலும் உடன் பயணித்தது…!

தற்போது நான் வேறு நெட்வொர்க் மாற முடிவு செய்து விட்டாலும் கூட ஏர்செல் சரியாக வேண்டும் என்பதே என் விருப்பம்..!

பழைய புல்லட், அம்பாஸடர், காண்டெசா ஓட்டுனவங்க அதனை பெருமையாகச் சொல்வது போல தான் ஏர்செல்லும்…!

என்னுடைய எத்தனையோ தகவல் தொடர்புகளில் அது ஒரு பெரிய பங்கை வகித்துள்ளது…!

நன்றி மறப்பது நன்றன்று…!

உண்மையெனில் பகிருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *