மனைவி இறந்த சோகத்தில், கணவரும் உயிரிழந்த சோகம்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே தேவூர், வட்ராம்பாளையத்தைச் சேர்ந்த தம்பதி, குப்புசாமி, 79 – பழனியம்மாள், 71. இவர்களுக்கு, இரு மகன்கள், இரு மகள்கள். அனைவருக்கும் திருமணமாகி விட்டது.சில நாட்களாக, உடல் நலமின்றி, பழனியம்மாள் சிகிச்சை பெற்று வந்தார்.

குப்புசாமியும் சோர்வுடன் காணப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை, 4:00 மணியளவில், பழனியம்மாள் இறந்தார். மனைவியின் உடலை பார்த்து, குப்புசாமி கதறியழுதார்; உறவினர்கள் ஆறுதல் கூறினர்.

மாலை, 6:00 மணியளவில், திடீரென குப்புசாமி மயங்கி விழுந்தார். உறவினர்கள் எழுப்ப முயன்றபோது, அவரும் இறந்தது தெரிந்தது.கணவனும், மனைவியும் அடுத்தடுத்து இறந்தது, மகன்கள், மகள்கள், ஊர் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

இறப்பிலும் இணை பிரியாத தம்பதி, ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டனர்.