மதுரை-விருதுநகர் இடையே பராமரிப்பு பணி: ரயில்கள் பயண நேரத்தில் தற்காலிக மாற்றம்..!

மதுரை-விருதுநகர் இடையே நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகள் காரணமாக அவ்வழியே இயக்கப்படும் ரயில்களின் பயண நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்தி: மதுரை-விருதுநகர் பிரிவில் நடைபெற்று வரும் பராமரிப்புப் பணிகளை முன்னிட்டு அவ்வழியே இயக்கப்படும் சில ரயில்களின் பயண நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரயில்கள் விவரம்: திருநெல்வேலி-ஈரோடு-மயிலாடுதுறை பயணிகள் ரயில் (எண்.56826) செப்.14 முதல் 30 ஆம் தேதி வரை புதன், சனி தவிர பிற நாள்களில் திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இருந்து 75 நிமிடங்கள் தாமதமாக காலை 6.20 மணிக்குப் புறப்படும். திருநெல்வேலி-மயிலாடுதுறை பயணிகள் ரயில்கள்(எண்.56822/56821) செப்.14 முதல் 30 ஆம் தேதி வரை புதன், சனி தவிர பிற நாள்களில் திண்டுக்கல்-திருச்சி இடையே தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. பாலக்காடு-திருச்செந்தூர் பயணிகள் ரயில்கள்(எண்.56769/56770) செப்.14 முதல் 29 ஆம் தேதி வரை புதன், சனி தவிர்த்துப் பிற நாள்களில் விருதுநகர்-திருநெல்வேலி இடையே தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன.

பாலக்காடு-திருச்செந்தூர் பயணிகள் ரயில் (எண்.56769) செப்.14 முதல் 29 ஆம் தேதி வரை புதன், சனி தவிர்த்துப் பிற நாள்களில் மதுரை-திருநெல்வேலி இடையே தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது. நாகர்கோவில்-கோவை பயணிகள் ரயில் (எண்.56319/56320) செப்.14, 18, 21 ஆகிய தேதிகளில் திண்டுக்கல்-விருதுநகர் இடையே தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *