மதுரை எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழாவில் மோடி …. ஜே.பி.நட்டா தகவல்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா.,   நாட்டில் புதிதாக 13 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் தொடங்கப்படும்  மதுரையில் விரைவில் அமைய இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிவடைந்து விட்டது  அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார்.

முன்னதாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் பேசியவர், நாட்டில் 20 புற்று நோய் ஆராய்ச்சி மையங்கள் தொடங்கப்படும் என்றும், 70 மருத்துவக் கல்லூரிகள் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளாக மாற்றப்படும் என்றும்  கூறியுள்ளார்.