மதியம் 3 வரை இன்று

வேலூர் தேர்தல் முடிவுக்கு பிறகு கருத்து தெரிவித்துள்ள ஏ.சி. சண்முகம், ‘தேர்தல் தோல்விக்கு முத்தலாக், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம் ஆகியவையே காரணம்’ என்று தெரிவித்திருந்தார். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறும் போது “முத்தலாக், காஷ்மீருக்கான தனி அந்தஸ்து நீக்கம் போன்ற காரணத்தால் வேலூரில் தான் தோற்றதாக ஏ.சி.சண்முகம் சொன்னது தவறானது. உண்மையில் இது போன்ற அறிவிப்புகள் தான் அவருக்கு வேலூரில் அதிகப்படியான வாக்குகளைப் பெற்று தந்துள்ளது. முஸ்லீம் மக்கள் முத்தலாக் சட்டத்தை எதிர்க்கவில்லை. இங்குள்ள அரசியல் கட்சியினர் தான் அதை எதிர்க்கிறார்கள். முஸ்லீம் மக்கள் ஆதரித்ததால்தான் குறைவான வாக்கு வித்தியாசத்தில் ஏ.சி.சண்முகம் தோற்றார்” எனத் தமிழிசை தெரிவித்துள்ளார்.

 

சிங்கப்பூரில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை தந்தது தொடர்பாக இந்திய வம்சாவளி போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

கர்நாடகாவில் மழை-வெள்ளத்துக்கு 48,915 வீடுகள் சேதம்- பலி எண்ணிக்கை 48 ஆக உயர்வு கர்நாடகத்தில் மழை-வெள்ளத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளதாகவும், 48 ஆயிரத்து 915 வீடுகள் சேதமடைந்திருப்பதாகவும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல் அனுமதியின்றி ‘கோதாவரி-பெண்ணாறை இணைக்க கூடாது’ – தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணாறுகள் இணைப்பு திட்டத்தை சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் ஆந்திர மாநில அரசு நிறைவேற்றக்கூடாது என தேசிய பசுமை தீர்ப்பாயம் நேற்று அதிரடியாக உத்தரவிட்டது.

அமெரிக்காவில் ‘கிரீன்கார்டு’ பெற அதிக வருமானம் தேவை – புதிய விதிமுறைகள் அறிவிப்பு அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமைக்காக வழங்கப்படும் ‘கிரீன்கார்டு’ பெறுவதற்கு அதிக பட்ச வருமானம் தேவை என்கிற புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடாதீர்கள்: பாகிஸ்தானுக்கு பஞ்சாப் முதல் மந்திரி எச்சரிக்கை இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடுவதை பாகிஸ்தான் உடனடியாக நிறுத்த வேண்டும் என பஞ்சாப் மாநில முதல் மந்திரி கேப்டன் அம்ரீந்தர் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நிலச்சரிவு இடங்களை முன்கூட்டியே அறிந்திருந்தால் மக்களை காப்பாற்றி இருக்கலாம் – பிரதமருக்கு ராகுல் கடிதம் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், கேரளாவில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய இடங்களை முன்னரே கண்டறிந்திருந்தால் மக்களை காப்பாற்றி இருக்கலாம் என வயநாடு தொகுதி எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சென்னை, வளசரவாக்கம் அருகே தேவிகுப்பத்தில் டாக்டர் தங்கதுரை வீட்டில் புகுந்து சுமார் 150சவரன் தங்க நகைகள், பணம் கொள்ளை- மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை.

நெல்லை கிழக்கு மாவட்டம் கடையம் வட்டாரம் பாப்பான்குளம் மெயின்ரோட்டில் முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தியின் மார்பளவு சிலையை சேதப்படுத்தப்பட்டுள்ளது காங் கட்சியினர் திரண்டதால் பரபரப்பு

சமச்சீர் கல்வியை அமல்படுத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வழக்கு பதிவு செய்யப்பட்ட சம்பவம்: சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மாலைராஜா,பொன்னையாபாண்டியன் உள்ளிட்டோர் நெல்லை ஜே.எம் எண் 1 வது நீதிமன்றத்தில் ஆஜர்.வழக்கறிஞர்கள் வேலை நிறுத்தம் காரணமாக நீதிபதி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

அத்திவரதர் தரிசனம் நாளை மட்டும் மாலை 5 மணியுடன் நிறைவு பெறும் : காஞ்சிபுரம் ஆட்சியர் பொன்னையா அறிவிப்புஅத்திவரதர் தரிசனம் நாளை மட்டும் மாலை 5 மணியுடன் நிறைவு பெறும் என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். நாளை வரதராஜப் பெருமாளுக்கு கருடசேவை என்பதால் மாலை 5 மணியுடன் அத்திவரதர் தரிசனம் நிறுத்தப்படும் என்றும் இறுதிநாளான 16ம் தேதி காலை 5 மணி முதல் மீண்டும் தரிசனம் தொடங்கும் என்றும் அவர் கூறினார். 16ம் தேதி வரும் பக்தர்கள் அனைவரும் தரிசித்த பின்பே அத்திவரதர் வைபவம் முழுமையாக நிறைவுபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின்போது தேசியக் கொடியை கோவில் பொது தீட்சிதர்கள் மேளதாளத்துடன் எடுத்துச் சென்று கிழக்கு கோபுரத்தில் தேசியக் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் இனிப்புகள் வழங்குவார்கள் இந்த ஆண்டு நாளை 15ஆம் தேதி அன்று கிழக்கு கோபுரத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்துவிட்டு பின்பு பல்வேறு வகையிலான ஆயிரம் மரக்கன்றுகளை இலவசமாக பக்தர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு பொது தீட்சிதர்கள் வழங்க உள்ளதாக அறிவிப்பு செய்துள்ளனர்

அத்திவரதர்வைபவம். இன்னும் 4 நாட்களே உள்ளன, ஸ்ரீ அத்தி வரதர் அனந்தஸரஸில் எழுந்தருள்வதற்கு. மணம் சற்று கனக்கிறது. இருந்தாலும் நம் பூர்வர்கள் காட்டிய விதிகளைத் தான் நாம் பின்பற்ற வேண்டும். இந்த இடம்தான் ஸ்ரீ அத்தி வரதர், அடுத்த 40 வருஷங்கள் பள்ளி கொள்ளப் போகுமிடம். பிறகு பார்க்க வாய்ப்பு கிடைக்குமோ கிடைக்காதோ, நன்றாக தரிசித்துக் கொள்ளுங்கள்

தமிழக தீயணைப்பு அதிகாரி உமாபதி தண்டபானிக்கு வீர தீர செயலுக்கான குடியரசு தலைவர் விருது அறிவிப்பு. திராவிடமணி பழனி, சுப்பிரமணியன் ராதாகிருஷ்ணன், ஜானகிராமன், ராஜூ ஆறுமுகம் ஆகியோருக்கு மெச்சத்தக்க விருதுகள் அறிவிப்பு.

ப.சிதம்பரம் நிறைவேற்றிய திட்டங்கள் குறித்து மக்களுக்கு தெரியும். தமிழக முதலமைச்சர் பழனிசாமி, மற்ற தலைவர்களை விமர்சிக்காமல் இருப்பது நல்லது – புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.

வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் குடிசை மாற்றுவாரியம் சார்பில் 4 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு தடை. வெள்ளியங்கிரி மலைவாழ்மக்கள் பாதுகாப்பு சங்கம் தொடர்ந்த வழக்கில் உத்தரவு. வீடுகள் கட்ட பல்வேறு துறைகளின் அனுமதி பெறவில்லை என தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி.

பிகில் திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் “பிகில்” எழுத்துக்கள் பொறித்த மோதிரங்களை பரிசாக வழங்கினார் நடிகர் விஜய்.