போலி உண்ணாவிரதம்! – கமல் சாடல்!

மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல், திருச்சியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் இன்று பேசுகிறார்.

தற்போது செய்தியாளர்களைச் சந்தித்த கமல், ‘காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது மத்திய அரசின் கடமை. அ.தி.மு.க-வின் போலியான உண்ணாவிரதத்தால் எதுவும் நடக்காது.

இன்று நடக்கும் கூட்டத்தில் சில துறைகளுக்காகக் கொள்கைகள் அறிவிக்கப்படும்’ என்றார். உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பால் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என நம்பிக்கையுடன் இருந்தோம்.

திருச்சி பொதுக்கூட்டத்தில் காவிரி பிரச்சினைக்கான தீர்வு பற்றி எடுத்துரைக்கப்படும்.மத்திய அரசின் எடுபிடிகளை போல் தமிழக அரசு செயல்படுகிறது.

காவிரி விவகாரத்தில் 2016 ம் ஆண்டு நடந்த நாடகமே தற்போதும் நடப்பதாக தோன்றுகிறது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.