போதிப்பவர்!

அன்றன்றுள்ள அப்பம்

போதிப்பவர்!

“நான் உனக்குப் போதித்து, நீ நடக்கவேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன் மேல் என் கண்ணை வைத்து, உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” (சங். 32:8).

எத்தனை அருமையான ஒரு வாக்குத்தத்தம்! “நான் உனக்குப் போதிப்பேன்; வழியை காட்டுவேன்; என் கண்ணை உன் மேல் வைப்பேன்; உனக்கு ஆலோசனை சொல்லுவேன்” என நான்கு காரியங்களைக் கர்த்தர் இங்கே குறிப்பிடுகிறார். கர்த்தர் உங்களுக்குப் போதிக்கிறது நித்தியமான, ஆசீர்வாதமான போதனையாகும். அதன்படி செய்தால், நீங்கள் ஜெயங்கொண்டவர்களா விளங்குவீர்கள்; நித்தியத்தில் பரலோக ராஜ்யத்தை சுதந்தரித்துக் கொள்ளுவீர்கள்.