பொட்டு சுரேஷ் கொலை… 5 ஆண்டுகளுக்கு பின் ஒருவர் சரண்

தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினராகவும், மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பராகவும் இருந்த பொட்டு சுரேஷ் கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி 31ல் மதுரை சத்யசாய் நகரில் உள்ள அவரது வீட்டின் முன்பு படுகொலை செய்யப்பட்டார்

இந்த சம்பவம் குறித்து சுப்பிரமணிய புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து  அட்டாக் பாண்டி மற்றும் பலரை கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சபா ரத்தினம் என்பவர் கடந்த 5 வருடங்களாக தலை மறைவாக இருந்து வந்தார். பொஅவரை போலீசார் தேடி வந்த நிலையில் இன்று காலையில் அவர் மதுரை 4-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரணடைந்தார்.