பெரியாறு அணை விவகாரம் : முதல்வர்கள் பேச்சுவார்த்தை

முல்லை பெரியாறு அணைப்பகுதியில் வாகன நிறுத்தும் இடம் அமைக்க, கேரளா மாநில அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரச மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு இன்று (நவ., 27) விசாரணைக்கு வந்த போது, தமிழகம் மற்றும் கேரள முதல்வர்கள் டிச., 11ம் தேதி இப்பிரச்னை குறித்து பேச்சு வார்த்தை நடத்த உள்ளனர் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.