பெரியதாழையில் கடலரிப்பை தடுக்க ரூ 30 கோடியில் தடுப்புச் சுவர் …முதல்வர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டம் பெரியதாழையில் கடலரிப்பை தடுக்க ரூ 30 கோடியில் தடுப்புச் சுவர் அமைக்கப்படும், தூத்துக்குடி மாவட்டம் , சாத்தான்குளம் வட்டத்திலுள்ள பெரியதாழையில் , மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் , மீன்பிடி உடமைகளை கடலரிப்பில் இருந்து பாதுகாக்கவும் , வடக்கு கடற்கரையில் ஏற்படும் கடலரிப்பினை குறைத்திடும் வகையில் , இரண்டு சிறிய நேர்கல் சுவர்களை அமைத்து கடற்கரையினை பாதுகாத்திட அலை தடுப்புச்சுவர் கருங்கற்களாலும் மற்றும் கான்கிரீட் கற்களாலும் 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் .

சென்னை மீன்பிடி துறைமுகத்தில் 200 மெட்ரிக் டன் அளவில் மீன்கள் கையாளப்படுகிறது . சுமார் 30 , 000 பேர் தினமும் இத்துறைமுகத்தில் மீன்பிடி மற்றும் மீன் விற்பனைத் தொழிலில் ஈடுபடுகின்றனர் . இம்மீனவர்களின் நலனை கருத்தில் கொண்டு , 10 கோடி ரூபாய் செலவில் துறைமுகத்தின் தென்பகுதியில் , சிறிய படகு அணையும் தளமும் , பெரிய படகு அணையும் தளமும் மற்றும் மீன் விற்பனை கூடமும் அமைக்கப்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் .

நாகை ஆற்காட்டுத் துறையில் ரூ 150 கோடியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும்  மாநில தகவல் ஆணையத்திற்கு ரூ 27.79 கோடியில் சொந்த கட்டடம் கட்டப்படும் 12,524 ஊராட்சிகள் மற்றும் 528 பேரூராட்சிகளில் ரூ 64.35 கோடியில் அம்மா இளைஞர் விளையாட்டு திட்டம் செயல்படுத்தப்படும் ,

தமிழ்நாடு உடற் கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை. வளாகத்தில் ரூ 3.5 கோடியில், 12 ஆசிரியர் குடியிருப்புகள் கட்டப்படும் என சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்புகளை வெளியி்ட்டுள்ளார்