புஷ்கரணி விழா பாதுகாப்பு பணிக்காக 3200 போலீசார் பணியில் உள்ளனர்.

நெல்லையில் தாமிரபரணி புஷ்கரணி விழா பாதுகாப்பு பணிக்காக 3200 போலீசார் பணியில் உள்ளனர். மாநகர போலீஸ் கமிஷனர் மகேந்திரகுமார் ரத்தோட் தலைமையில் 1700 பேர், மாவட்டத்தில் எஸ்.பி. அருண் சக்தி குமார் தலைமையில் 1500 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

இதற்காக திருச்சி, வேலூர், மதுரை, கரூர், நாகப்பட்டிணம் , அரியலூர், பெரம்பலுர் உள்ளிட்ட வெளி மாவட்டத்தில் இருந்து நெல்லை போலீசார் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் மீட்பு படை வீரர்கள், போக்குவரத்து போலீசாரும் இடம் பெற்றுள்ளனர். மேலும் எஸ்பிக்கள், ஏடிஎஸ்பிக்கள், டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்பெக்டர்களும் வந்துள்ளனர்.