புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை 48 மணி நேரத்தில் அனைத்தையும் சரி செய்ய முடியாது – வைகோ

 

ஒரு வாரம் இரவு பகல் பார்க்காமல் வேலை செய்தார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அதிகாரிகள் – பாராட்டி வைகோ பேட்டி

மதுரை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேட்டி:

சுனாமிக்கு அடுத்து அதிர்ச்சி தரத்தக்க சேதத்தை கஜா புயல் 7 மற்றும் 8 மாவட்டங்களில் ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக நாகை மாவட்டத்தில் திருமறைக்காடு இந்தப் புயலால் நாசமாக்கி ஏராளமான மாடுகள் அங்குள்ள கால்நடைகள் ஆடுகள் எல்லாம் இழந்து அப்புறப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு தொற்று நோய் வந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

1.17 ஆயிரம் வீடுகள் நொறுங்கியுள்ளது.

85,000 மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்து உள்ளன.

850 மின்மாற்றிகள் சேதமடைந்துள்ளன.

இதை 48 மணி நேரத்தில் சரி செய்ய முடியாது.

நான் வந்து இந்த அரசு அதிகாரிகள் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் போலீஸ் அதிகாரிகள் ஊழியர்கள் மக்கள் நல்வாழ்வு துறை ஊழியர்கள் ஒருவாரமாக தூங்கவில்லை சாப்பிடவில்லை அதையும் மனதில் கருதி தான் கருத்து கூற வேண்டும்.

உதயகுமார் போன்ற மந்திரிகள் இரவு பகலாக இருந்து வேலை செய்துள்ளனர்.

நேற்று நாசரேத் சென்றிருந்தேன் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு புயலால் பாதிக்கப் படவில்லை என்றாலும் கூட மெழுகுவர்த்திகள் பேட்டரிகள் மருந்துகள் கொண்டுவந்து பேரூராட்சி அலுவலகத்தில் எந்த நேரமும் தொடர்பு மொபைல் போன் கொண்டு வந்து அதிகாரிகள் 4 நாட்கள் அங்கேயே இருந்துள்ளனர்.

ஒரு வாரமாக பல்லாயிரக்கணக்கான அதிகாரிகள் வேலை செய்துள்ளனர்.

குறை சொல்வது எளிது.

இந்த அரசாங்கத்திற்கு ஒன்று கூறிக்கொள்ள விரும்புகிறேன். விவசாயிகள் வாழ்வு அடியோடு நாசமாகியுள்ளது. தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்து உள்ளன. அவர்களின் 15 வருட உழைப்பு நாசமாகியுள்ளது.

அதனால சரியான கணக்கெடுப்பின் மூலம் அந்த குடும்பங்களை வாழ வைப்பதற்கான அடுத்த கடமையை அரசு செய்ய வேண்டும்.

தொற்றுநோய் பரவாமல் தடுக்க வேண்டும்.

விவசாயத்தை சரி செய்ய வேண்டிய வேலையை அரசு செய்ய வேண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எவ்வாறு தீவிரம் காட்டப்பட்டது. இதுபோல நிவாரண நடவடிக்கைகளில் தீவிரம் காட்ட வேண்டும் என்பது எனது கோரிக்கை என வைகோ கூறினார்.