புது வரவால் ”சாமி ஆட்டம்”

ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், சூரி உட்பட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘சாமி 2’. விக்ரமின் திரைப் பயணத்தில் செகண்ட் பெஸ்ட் ஓப்பனிங் படம்.

இப்படம் விமர்சன ரீதியாக மிகவும் கடுமையான கருத்துக்களை பெற்றாலும் மக்கள் ஆதரவு அமோகமாக இருந்தது, முதல் வாரத்தில் ‘சாமி-2’ நல்ல வசூலை பெற்றது.

அடுத்தடுத்த வாரங்களில் ‘செக்கச் சிவந்த வானம்’, ‘ராட்சசன்’, ‘96’ ஆகிய படங்கள் வெளியானதால் ‘சாமி-2‘ படத்தின் வசூல் குறைய ஆரம்பித்தது. இப்படி அடுத்தடுத்து பெரிய படங்கள் உடனே வருவது தமிழ் சினிமாவிற்கு தான் ஆபத்து.