பிஷப்க்கு செப்.24 வரை போலீஸ் காவல்

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தின் பேராயர் பிராங்கோ அங்கு பணியாற்றிய கன்னியாஸ்திரியை கடந்த 2014 முதல் 2016 வரை 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகார் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்

இதனிடையே,  பிராங்கோ ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்த நிலையில்  முன்னாள் பிஷப் பிராங்கோவை செப்.24 வரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்ததுடன் பிராங்கோவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கோட்டயம் நீதிமன்றம் உத்தர விட்டது.