பிற்பகல் செய்தி தொகுப்பு

🎯பிரபலம் பெற்ற டப்ஸ்மாஸ் உட்பட சுமார் 16 இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டு சுமார் 620 மில்லியன் கணக்குகளின் பாஸ்வோர்டு லீக் ஆகியுள்ளது. எனவே டப்ஸ்மாஸ் பயனாளர்கள் தங்கள் கடவுச்சொல்லை மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் வத்தலகுண்டு பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது இதுகுறித்து அந்த சிறுமியின் தாயார் நிலக்கோட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார் புகாரின்பேரில் போலீசார் சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி மதுரை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டார்

சேலம்: கொண்டலாம்பட்டி பட்டர்பிளை பாலத்தில் இருந்து பெங்களூரு – பொள்ளாச்சி சென்ற தனியார் சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு, 15-க்கும் மேற்பட்டோர் காயம்.

சம்பவ இடத்தில் சேலம் ஆட்சியர் ரோகிணி நேரில் ஆய்வு செய்தார்

உசிலம்பட்டியில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காவலர் தற்கொலை

கவர்ச்சிகரமான மோசடி முதலீட்டு திட்டங்களுக்கு தடை விதிக்கும் மசோதா – நாடாளுமன்றத்தில் தாக்கல்

டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் போராட்டம்:

கூட்டாட்சி தத்துவம் மற்றும் அரசியலமைப்பை பாதுகாக்க வலியுறுத்தியும், பிரதமர் மோடிக்கு எதிராக டெல்லியில் இன்று மாலை எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட போராட்டம் நடைபெற உள்ளது.

இதில் மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, அரவிந்த் கெஜ்ரிவால், தேவகவுடா, ஃபரூக் அப்துல்லா, சரத்பவார் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

கும்பகோணத்தில் ராமலிங்கம் கொலையை கண்டித்து நடக்க இருந்த ஊர்வலத்தில் பங்கேற்க சென்ற இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் கைது

உடுமலை கண்ணாடி புத்தூரில் தஞ்சமடைந்துள்ள சின்னத்தம்பி யானை போதிய உணவு கிடைக்காததால் தென்னந்தோப்பில் உள்ள மரங்களை சாய்த்து குருத்தோலைகளை உண்கிறது

துறைமுக முகத்துவார பகுதியை தூர்வார கோரி புதுச்சேரி மீனவர்கள் 2 வது நாளாக வேலை நிறுத்தம்

மீனவர்களின் வேலை நிறுத்தத்தால் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் நிறுத்தம்

முகத்துவாரத்தை தூர்வாராவிட்டால் பந்த் போராட்டம் நடத்தப்படும் என மீனவர்கள் எச்சரிக்கை

இலவச பயண அறிவிப்பின் காரணமாக சென்னை மெட்ரோ ரயில் சேவையை நேற்று மட்டும் (12.02.2019) 2 லட்சத்து 10 ஆயிரத்து 792 பயணிகள் பயன்படுத்தி உள்ளனர்.

-🚇சென்னை மெட்ரோ ரயில்வே

மீண்டும்….

இன்று அதிகாலை 1.51 மணிக்கு அந்தமான் அருகே கடல் மட்டத்துக்கு கீழே 10 கி.மீ ஆழத்தில் நில அதிர்வு – ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவு.

சென்னையிலிருந்து புவனேஸ்வர் , மும்பை , டெல்லி செல்லும் விமானங்கள் போதிய பயணிகள் இல்லாததால் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு

முன்பதிவு செய்துள்ள பயணிகள் மாற்று விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்
இண்டிகோ ஏர்லைன்ஸ் அறிவிப்பு

வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூபாய் 2000 சிறப்பு நிதி பெறும் பயனாளிகளின் விபரம் வங்கிக் கணக்கு விவரங்களுடன் தயாராக உள்ளதாக வருவாய்துறை தகவல்

ஸ்டெர்லைட் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என்னும் தகவலில் உண்மை இல்லை
இன்று தீர்ப்பு வெளியாகும் என்ற தகவல் வதந்தி

ஸ்டெர்லைட் நிர்வாகம் தரப்பில் விளக்கம்

2000 ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படும் தடை கோரிய சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு

நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிமன்றம் அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் வகையில் இந்தத் திட்டம் உள்ளதாக மனுவில் குற்றச்சாட்டு

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான சிஏஜி அறிக்கை மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

பலத்த எதிர்ப்பார்ப்புக்கிடையே தலைமை கணக்கு அதிகாரியின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக வனத்துறை சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய வனவர் பணி இடங்களுக்கு பிப்ரவரி 18 முதல் 22 வரை சென்னையில் சான்றிதழ் சரிபார்ப்பு, ஆளுமை திறன் தேர்வு நடைபெறுகிறது

வரும் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வருகிறது 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு…

நாடாளுமன்ற வளாகத்தில் ரஃபேல் போர் விமான கொள்முதலில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றஞ்சாட்டி காகித விமானத்துடன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்.

சோனியா, ராகுல், மன்மோகன்சிங், ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்பு.

கால்நடை தொழிலை ஊக்குவிக்க சேலத்தில் ரூ 396 கோடியில் கால்நடை பூங்கா 110 விதியின் கீழ் முதல்வர் அறிவிப்பு.

ஈரோடு : ஊஞ்சலூர் அரசுப்பள்ளியில் மாணவிகளிடம் தவறாக நடந்ததாக புகார், வேதியியல் ஆசிரியர் ரமேஷ் பணியிடை நீக்கம்.

திருப்பூர் : கண்ணாடிபுத்தூரில் முகாமிட்டுள்ள சின்னதம்பி யானை 3 நாட்களில் 30க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சாய்த்துள்ளது

போதிய உணவு கிடைக்காததால் தென்னை மரங்களை சாய்த்து தென்னங்குருத்து மற்றும் ஓலைகளை உண்பதாக தகவல்.

எதிர்க்கட்சிகள் தொடர் அமளியால் மாநிலங்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

ஸ்டெர்லைட் வழக்கின் தீர்ப்பு தற்போதைக்கு வர வாய்ப்பில்லை, அடுத்தவாரம் தீர்ப்பு வரலாம் – தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி

தமிழகத்தில் ஒரு சட்டமன்ற தொகுதியில் உறுப்பினர் இறந்து விட்டால் 5 வருடத்தில் மீதமுள்ள காலத்திற்கு அந்த தொகுதியில் வெற்றி பெற்ற அரசியல் கட்சியை சேர்ந்த வேறொரு உறுப்பினரை நியமிக்கலாமே? – உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து

தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்களின் தொகுதிக்கு இந்த கருத்து பொருந்தாது – நீதிபதிகள்

* திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை நடத்த கோரிய வழக்கு பிப்.18ம் தேதிக்கு ஒத்திவைப்பு.*