பிரான்ஸ் பத்திரிகை செய்திக்கு நிர்மலா பதிலடி

ரபேல் விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் பத்திரிகை செய்திக்கு மத்திய அமைச்சர் நிர்மலா சித்தாராமன் பதிலடி கொடுத்துள்ளார். மூன்று நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள மத்திய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், அந்நாட்டு ராணுவ அமைச்சர் புளோரன்ஸ் பார்லேயை சந்தித்தார். பின்னர் ரபேல் விமான தயாரிப்பு ஆலைக்கு சென்றார்.

இந்த பயணம் குறித்து காங். கேள்வியெழுப்பியுள்ள நிலையில் அந்நாட்டு பத்திரிகை வெளியிட்ட செய்தியினை திட்டவட்டமாக மறுத்து அளித்த பேட்டி, ரபேல் விமானம் ஒப்பந்தம் இந்திய- பிரான்ஸ் அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தம். இதில் டாசல்ட் நிறுவனம் தான் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்தது.இதில் மத்திய அரசின் தலையீடு இல்லை என்றார்.

ரபேல் போர் விமான விவகாரம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள சூழ்நி்லையில் காங். தலைவர் ராகுல் வரும் 13-ம் தேதி பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு வருகை தர உள்ளதாகவும், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்களை சந்தித்து பேச உள்ளதாகவும் கர்நாடகா மாநில காங். தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்திருந்தார்.இந்நிலையில் ராகுலின் அந்த பயண நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.