பிரசிடெண்ட் ரீகன் செஞ்ச ஒரு கூத்து…

🎯அமெரிக்காவில் அப்போது நடக்கவிருந்த எலெக்‌ஷனையொட்டி ரேடியோ பேச்சின் போது அப்போதைய பிரசிடெண்ட் ரீகன் செஞ்ச ஒரு கூத்து வரலாற்று பக்கத்தில் ஆழமாக பதிஞ்சிருக்குது.

அதாவது தனது குரலை சோதிப்பதற்காக ரேடியோவில் ஹலோ மைக் டெஸ்டிங்.. ஒன் டூ த்ரீ என்று சொல்கிறார்களே..

அதே தொணியில் அமெரிக்க அதிபர் ரீகன் ரேடியோவில் ரொம்ப கேஷூவலா ‘எனது சக அமெரிக்கர்களே ரஷ்யாவை அழிப்பதற்கான சட்டவாக்கத்திற்கு இன்று ஒப்புதல் அளித்திருக்கிறேன். இன்னும் ஐந்து நிமிட நேரத்தில் குண்டுவீச்சு ஆரம்பமாகும்’அப்படீன்னார்.

இதே ஆகஸ்ட் 11ம் தேதி ச்சும்மா பேசிய இந்த பேச்சு வானலையில் ஒலிப்பரப்பாகி விட அதைக் கேட்ட அமெரிக்கர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

அதன்பின் குரல் பரிசோதனைக்குதான் இப்படி இல்லாத ஒன்றை பேசினார் என்பதை அறிந்தபின் நிம்மதி அடைஞ்சாங்க.