பாளை நகைக்கடை கொள்ளை வழக்கில் ஒருவர் கைது

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பிரபல நகைக்கடையில் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஷாலிக்ஷேக் என்பவரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளார். கைதான ஷாலிக்ஷேக்கிடம் இருந்து 37.5 கிலோ நகைகள் மற்றும் ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.