பாளையங்கோட்டையில் சீமான் ஆர்ப்பாட்டம்

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அணு உலைகளின் கழிவுகளைச் சேமித்து வைக்க தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கவிருக்கிற மத்திய அரசின் அறிவிப்பு ஏற்கனவே அழிந்து வருகிற தமிழர் நிலத்தை ஒட்டுமொத்தமாக அளிக்கக்கூடிய நாசகர திட்டமாகும்.

கூடங்குளம் அணு மின் நிலையத்தையே முழுதாக மூடக்கோரி பல ஆண்டுகளாக நாம் போராடிக்கொண்டிருக்கிற நிலையில்.. மானுட வாழ்க்கைக்கும், இந்த நிலத்திற்கும் பேராபத்தினை விளைவிக்கக்கூடிய அணுக்கழிவுகளைச் சேமித்து வைக்க அணுக்கழிவு மையத்தை கூடங்குளம்அணு உலை அருகிலேயே அமைக்க முற்படும் மத்திய, மாநில அரசுகளின் திட்டம் வன்மையானக் கண்டனத்திற்குரியது

ஸ்டெர்லைட் ஆலை, நியூட்ரினோ மையம், அணு உலை, அணுக்கழிவு அமையம் எனப் பேராபத்து நிறைந்த அழிவுத்திட்டங்களையெல்லாம் தமிழ் நாட்டின் மீது திணிப்பதன் மூலம் இந்தியாவின் குப்பைத் தொட்டியாகத் தமிழ்நாடு பயன்படுத்தப்படுகிறது என்கின்ற எண்ணம் ஒவ்வொரு தமிழனின் உள்ளத்திலும் குமுறல்களாக வெளிப்படுகிறது.

எனவே, தமிழகத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கிற முயற்சியினை மத்திய அரசும் இந்திய அணுசக்தித் துறையும் உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும், கூடங்குளம் அணு மின் நிலையத்தினை நிரந்தரமாக மூட  வழிவகைகளைச் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக பாளையங் கோட்டை பேருந்து நிலையம் எதிரில் உள்ள ஜோதிபுரம் திடலில் ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் தொடங்கியது

#https://www.naamtamilar.org/