பாடகராக அவதாரம் எடுத்த நடிகர் ஜெய் video inside

ஜருகண்டி என்ற படத்தில் வரும் செய்யிறத செஞ்சு முடி பாடலின் மூலம் நடிகர் ஜெய் பாடகராகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குனர் பிச்சுமணி இயக்கத்தில் நடிகர் ஜெய் நடிப்பில் உருவாகி வரும் படம் ஜருகண்டி. ஆக்‌ஷன் மற்றும் காமெடி கதையை மையப்படுத்திய இப்படத்தை நிதின் சத்யா மற்றும் பத்ரி கஸ்தூரி இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்புப் பெற்றுள்ளது.
பொதுவாக ஒரு நடிகர், நடிப்பைத் தொடர்ந்து பாடல், படம் இயக்குவது, தயாரிப்பது ஆகியவற்றில் அதிக ஆர்வம் காட்டுவது வழக்கம். அந்த வகையில், நடிகர் ஜெய்யும், இப்படத்தின் மூலம், பாடகராக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.  இப்பாடலை கங்கை அமரன் எழுதியுள்ளார்.