பாக். ராணுவத்தினர் அத்துமீறல் – இந்திய வீரர் பலி

ஜம்மு-காஷ்மீர்  ஸ்ரீநகரில் இன்று   அதிகாலை 4 மணியளவில் ஆர்னியா செக்டார் மற்றும் நவ்சேரா பகுதிகளில், எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறித் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் நவ்சேரா பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பிகாஸ் குருங் (21), எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார்.

இதையடுத்து, பாகிஸ்தான் படைக்கு, இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது. எல்லையில் பதற்றம் நிலவுவதால், அட்டாரி மற்றும் வாகாவில் இந்தியா – பாகிஸ்தான் வீரர்கள் இடையே இனிப்புகள் பரிமாறி கொள்வது இந்த ஆண்டு நடக்கவில்லை.