பள்ளி மாணவ-மாணவிகள் பாரதியார் வேடமணிந்து ஊர்வலம்

மகாகவி பாரதியார் 136வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பாரதியார் பிறந்த ஊரான எட்டயபுரத்தில் பாரதியார் நினைவு அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ-மாணவிகளின் ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

எட்டயபுரம் அரண்மணை முன்;பு தொடங்கி நிகழ்ச்சிக்கு பாரதியார்; நினைவு அறக்கட்டளை நிறுவனர் முத்துமுருகன் தலைமை வகித்தார். பள்ளி மாணவ-மாணவிகள் பாரதியார் வேடமணிந்தும்,பாரதியார் பாடல்களை பாடிய படி கோலட்டம் அடித்தனர்.

தொடர்ந்து உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். இதன் பின்பு ஊர்வலத்தினை எட்டயபுரம் காவல் ஆய்வாளர் ராமையா தொடங்கிவைத்தார். பள்ளி மாணவ-மாணவிகள் பாரதியார் பாடல்களை பாடிய படி, முக்கிய வீதிகளின் வழியாக பாரதியார் இல்லத்தினை வந்தடைந்தனர்.

பின்னர் இல்லத்தில் உள்ள பாரதியார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.