பருத்திப்பட்டு ஏரியை சீரமைத்து, பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது – மாஃபா பாண்டியராஜன்

சென்னை ஆவடி அருகே பருத்திப்பட்டு ஏரியை சீரமைத்து 28 கோடி ரூபாய் மதிப்பில் பூங்கா அமைப்பதற்கு பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். பருத்திப்பட்டு ஏரியை பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 9 மாதத்திற்குள் ஏரியை ஆழப்படுத்துவது, கரைகளை வலுபடுத்துவது, ஏரியின் மத்தியில் பறவைகள் சரணாலயம் அமைப்பது, படகு சவாரி உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளது என்று கூறினார்