பத்மாவத் படத்தை எந்த மாநிலங்களும் தடை விதிக்கக் கூடாது உச்ச நீதிமன்றம்

பத்மாவதி திரைப்படத்தை மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், ஹரியாணா மாநில அரசுகள் வெளியிட விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கப்பட்டு விசாரணை நடைபெற்றது

தொடர்ந்து பத்மாவத் திரைப்படத்திற்கு மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், ஹரியாணா மாநில அரசுகள் விதிக்கப்பட்ட தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியதுடன் பத்மாவத் படத்திற்கு எந்த மாநிலங்களும் தடை விதிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பத்மாவதி என்ற பெயர் சர்ச்சையால் பத்மாவத் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது