பணத்துக்காக 62வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த நபர்!

சீனாவின் இளம் சாகச வீரர் 62 மாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

சீனாவின் சாங்ஷா பகுதியைச் சேர்ந்தவர் வூ யாங்னிங்க்,26, இவர் பல அடி உயரமுள்ள அடுக்குமாடி கட்டிடங்கள், பில்டிங்கள் மீது தற்காப்பு உபகரணம் இல்லாமல் ஏறி சாகசம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதற்காக தனது உயிரை பல முறை பணயம் வைத்துள்ளார். இந்நிலையில் 20 ஆயிரம் அமெரிக்க டாலர் ‘பெட்’டிகாக கடந்த 8-ம் தேதி ஹூனானானின் 62 அடி உயர கட்டிடத்தின் மீது ஏறி சாகசம் செய்தார்.

கட்டிடத்தின் விளம்பில் சுவரில் தொங்கியபடி புல்லப்ஸ் செய்த இவர் கீழே விழுந்து பரிதாபமாக இறந்தார். இந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.