படப்பிடிப்பு தளத்தில் “தர்மஅடி” வாங்கிய நடிகர்

நடிகர் சூர்யவர்மனை  பொதுமக்கள் சூழ்ந்து தர்மஅடி கொடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோலிவுட்டில் பல புதுமுக நடிகர்கள் தொடர்ந்து களம் இறங்குகிறார்கள். அதிலும் ஒரு சிலர் தான் மக்கள் மனதில் இடம் பிடிக்கிறார்கள்.. மற்றவர்களால் ஏதோ ஒரு சில படங்களில் சிறிய சிறிய ரோல்களில் நடிப்பார்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இளம் நடிகரான சூர்யாவர்மன் ‘காதல் எனக்கு பிடிக்கும்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு வேலூரில் நடந்து வருகிறது. இந்த படத்தில் நடிகர் சூர்ய வர்மன் முகமூடி அணிந்து இந்த படத்தில் நடிக்கும் காட்சி இடம் பெற உள்ளது.

இந்த படத்தில் ஹீரோ ஹீரோயின்கள் என்ற கதாபாத்திரம் யாரும் கிடையாது. இதில் முகமூடி அணிந்தவாறு சூர்யவர்மன் நடித்து உள்ளார். இதற்கிடையில் முகமூடி அணிந்து ஊருக்குள் சுற்றி வந்த  சூர்யவர்மனை யாரோ குழந்தை கடத்த வந்த மர்மநபர் என எண்ணி பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து உள்ளனர் இந்த செய்தி படக்குழுவினருக்கு தெரிய வரவே, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தவர்கள் படப்பிடிப்பு குறித்து விளக்கவே பின்னர் அவரிடம் பொது மக்கள் வருத்தம் தெரிவித்து உள்ளனர்.