பஞ்சாங்கம் ~ ராசி பலன்கள்

பஞ்சாங்கம் ~ ராசி பலன்கள்

ஆனி
~ 25 ~

{10.07.2019.} புதன்கிழமை.

வருடம்~ விகாரி வருடம். (விகாரி நாம சம்வத்ஸரம்}

அயனம்~ உத்தராயணம்.

ருது~ க்ரீஷ்ம ருதௌ.

மாதம்~ ஆனி ( மிதுன மாஸம்)

பக்ஷம்~ சுக்ல பக்ஷம்.

திதி~ அஷ்டமி காலை 07.42 AM. வரை. பிறகு நவமி.

ஸ்ரார்த்த திதி ~ நவமி.

நாள் ~ புதன்கிழமை { ஸௌம்யவாஸரம் } ~~~~

நக்ஷத்திரம்~ சித்திரை இரவு 08.28 PM.வரை. பிறகு சுவாதி .

யோகம்~ சித்த யோகம் .

கரணம் ~ பாலவம், கௌலவம்

நல்ல நேரம்~ காலை 09.15 AM ~ 10.15 AM & 04.45 PM ~ 05.45 PM .

ராகு காலம்~ பிற்பகல் 12.00 ~ 01.30 PM .

எமகண்டம்~ காலை 07.30 ~ 09.00 AM.

குளிகை ~ 10.30 AM ~ 12.00 NOON. .

சூரிய உதயம். ~ காலை 05.58 AM.

சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.36. PM

சந்திராஷ்டமம் ~ உத்திரட்டாதி, ரேவதி.

சூலம்~ வடக்கு .

பரிகாரம்~ பால் .

இன்று— .🙏🙏

🚩🔯⚜ராசி பலன்கள்⚜🔯🚩

🔔 10/ 7/ 2019 🔔

🔯மேஷம் ராசி

குடும்ப உறுப்பினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு இன்னல்கள் தோன்றி மறையும். உறவினர்களின் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

அசுவினி : சுபிட்சம் உண்டாகும்.
பரணி : புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
கிருத்திகை : இன்னல்கள் மறையும்.

🔯ரிஷபம் ராசி

நிலுவையில் இருந்து வந்த தனவரவுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். முயற்சிக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றியைத் தரும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

கிருத்திகை : தனவரவுகள் கிடைக்கும்.
ரோகிணி : முன்னேற்றம் உண்டாகும்.
மிருகசீரிடம் : வெற்றி கிடைக்கும்.

🔯மிதுனம் ராசி

திருமண சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியங்கள் நிறைவேறும். புதிய நபரின் அறிமுகத்தால் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மிருகசீரிடம் : முயற்சிகள் ஈடேறும்.
திருவாதிரை : அலைச்சல்கள் உண்டாகும்.
புனர்பூசம் : காரியங்கள் நிறைவேறும்.

🔯கடகம் ராசி

உத்தியோகஸ்தரர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் ஈடேறும். வியாபாரத்தில் இருந்து வந்த எதிர்ப்புகள் குறையும். உறவினர்களின் மத்தியில் உங்களின் செல்வாக்கு மேம்படும். புதிய வீடு மற்றும் இடம் வாங்குவது பற்றிய சிந்தனைகள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

புனர்பூசம் : இடமாற்றம் உண்டாகும்.
பூசம் : எதிர்ப்புகள் குறையும்.
ஆயில்யம் : செல்வாக்கு மேம்படும்.

🔯சிம்மம் ராசி

தந்தைவழி சொத்துக்களில் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். சூழ்நிலையை அறிந்து செயல்படுவது நன்மையை அளிக்கும். வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மற்றவர்களுக்கு உதவி செய்வதால் உற்சாகம் ஏற்படும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

மகம் : பிரச்சனைகள் குறையும்.
பூரம் : உற்சாகமான நாள்.
உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.

🔯கன்னி ராசி

சேமிப்பை உயர்த்தும் எண்ணங்கள் மேலோங்கும். வித்தியாசமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நிலுவையில் இருந்து வந்த பணிகள் நிறைவடையும். பிரிந்து சென்றவர்கள் விரும்பி வருவார்கள். பேச்சு மற்றும் செயல்பாடுகளில் அனுபவ அறிவு மேம்படும். தோற்றப் பொலிவு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

உத்திரம் : எண்ணங்கள் மேலோங்கும்.
அஸ்தம் : காரியசித்தி உண்டாகும்.
சித்திரை : அறிவு மேம்படும்.

🔯துலாம் ராசி

அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். கவலைகளால் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு எண்ணிய காரியத்தை முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

சித்திரை : புதிய நட்பு கிடைக்கும்.
சுவாதி : திறமைகள் வெளிப்படும்.
விசாகம் : புத்துணர்ச்சி உண்டாகும்.

🔯விருச்சகம் ராசி

வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். மற்றவர்களின் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். பயணங்களால் அலைச்சலும், ஆதாயமும் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

விசாகம் : ஆதாயம் உண்டாகும்.
அனுஷம் : செல்வாக்கு மேம்படும்
கேட்டை : அலைச்சல்கள் உண்டாகும்.

🔯தனுசு ராசி

சுப காரியங்கள் தொடர்பான முயற்சிகளில் அனுகூலமான சூழல் உண்டாகும். குடும்பத்தினரிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் நிதானம் வேண்டும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

மூலம் : அனுகூலமான நாள்.
பூராடம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
உத்திராடம் : நிதானம் வேண்டும்.

🔯மகரம் ராசி

உத்தியோகத்தில் எதிர்பார்த்த சாதகமான சூழல் உண்டாகும். திருமணம் தொடர்பான சுப காரியங்கள் ஈடேறும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அறகாரியங்கள் செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

உத்திராடம் : சாதகமான நாள்.
திருவோணம் : சுபகாரியங்கள் ஈடேறும்.
அவிட்டம் : அலைச்சல்கள் உண்டாகும்.

🔯கும்பம் ராசி

உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய நபரின் அறிமுகத்தால் தொழில் சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அவிட்டம் : ஆதரவு கிடைக்கும்.
சதயம் : முன்னேற்றம் உண்டாகும்.
பூரட்டாதி : அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

🔯மீனம் ராசி

பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சனைகளை தவிர்க்கலாம். உறவினர்களிடம் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். நினைக்கும் காரியங்களில் காலதாமதம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்

பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.
உத்திரட்டாதி : கருத்து வேறுபாடுகள் தோன்றும்.
ரேவதி : பொறுப்புகள் அதிகரிக்கும்