பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா உற்சவம்…

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் தொன்மையான பழைய சோமாஸ்கந்தர் சிலையை வைத்து பங்குனி உத்திர திருவிழா நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

உயர் நீதிமன்றம் உத்தரவையடுத்து பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பக்தர்கள் உபயதாரர்கள் பெரும் மகிழ்ச்சி.

உலகப் பிரசித்தி பெற்றதும் 3500 ஆண்டுகள் மிகப் பழமையானது பஞ்சபூத ஸ்தலங்களில் முக்கியமான மண் ஸ்தலமாக விளங்கு கூடியதுமாக காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் திருக்கோவில் உள்ளது.

இத்திருக்கோவிலில் பங்குனி மாதத்தில் பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா உற்சவம் வெகு விமரிசையாக தொன்று தொட்டு வழக்கமாக நடைபெற்று வருகிறது.
இந்தப் பங்குனி திருக்கல்யாண திருவிழாவை சமுதாய அமைப்புகள், வியாபார சங்கங்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் உபயதாரர்களாக இருந்து வெகுவிமர்சியாக நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஏகாம்பரநாதர் திருக்கோவில் உற்சவர் சிலையான பழமையான சோமாஸ்கந்தர் சிலை பழுதடைந்த காரணத்தைக் காட்டி இந்து சமய அறநிலையத் துறையினர் புதியதாக உற்சவர் சிலையை செய்திருந்தனர்.

இந்த உற்சவர் சிலை செய்ததில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி வழக்கு தொடுக்கப்பட்ட காரணத்தினால் உற்சவர் சிலையானது நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா புதிய உற்சவர் சிலை இல்லாத காரணத்தினால் திருவிழா தடைபடும் சூழ்நிலை ஏற்பட்டது.

மேலும் திருவிழாவை நடத்துவதற்கான எந்தவித முன்னேற்பாடுகளையும் இந்து சமய அறநிலையத் துறையினர் மேற்கொள்ளவில்லை. இதனால் காஞ்சி நகர பொதுமக்களும் உற்சவ உபயதாரர்கள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

மேலும் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவத்தினை நடத்தாமல் போனாள் மண்ணை ஆளுகின்ற ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் பெரும் தீங்கு நேரும் என பயப்படுகின்றனர்.

இந்நிலையில் பங்குனி உத்திர உற்சவ உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் சிலர் ஏகாம்பரநாதர் திருக்கோவில் பழமையான சோமாஸ்கந்தர் உற்சவர் சிலையை வைத்து பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை நடத்திட வேண்டுமென உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

அதன்படி நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட புதிய சிலையை திருப்பி தரமுடியாது என்றும் பழமையான சோமாஸ்கந்தர் உற்சவர் சிலையை வைத்து பங்குனி உத்திர திருவிழாவை தடையின்றி நடத்திக் கொள்ளலாம் என உத்திரவிட்டுள்ளது. மேலும் திருவிழாவை கண்காணித்து நடத்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சிறப்பு அதிகாரி ஐ.ஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான அதிகாரிகளுக்கு உத்தரவு விட்டது.

அதைத்தொடர்ந்து இன்று பங்குனி உத்திர திருவிழாவிற்கு கொடி ஏற்றப்பட்ட இருந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கொடி யேற்ற விழாவை காலதாமதம் செய்தனர்.

இதனால் கொடியேற்ற விழாவிற்கு வந்த பக்தர்கள், உபயதாரர்கள் கோவில் நிர்வாகம் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதனால் கோவில் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இருதரப்பு பேச்சு வார்த்தைக்கு பிறகு
நீதிமன்றம் உத்தரவு படி பங்குனி உத்திர திருவிழா நடத்த கொடி ஏற்றப்பட்டது.

இதனால் சிவ பக்தர்கள், உபயதாரர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கொடியேற்றத்தை தொடர்ந்து காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் திருக்கோவில் பழமையான சோமாஸ்கந்தர் உற்சவர் சிலையை வைத்து பங்குனி உத்திர திருவிழா 10 வெகு விமரிசையாக நடைபெறும்.