நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை

நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை நீடித்து வருவதால் பாபநாசம் மற்றும் சேர்வலாறு அணைகளில் இருந்து விநாடிக்கு 24,725 ஆயிரம் கன அடித்தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்று கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குற்றாலம் அருவிகளிலும் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கேரளாவில் கன மழை பெய்து வருவதன் எதிரொலியாக நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்;ச்சி மலைப்பகுதியில் கடந்த ஒருவாரமா கனமழை நீடித்து வருகிறது. நீர்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. மாலை நிலவரப்படி 143 அடி கொள்ளவு கொண்ட பாபநாசம் அணை காலையில் இருந்ததை விட 6 அடி உயர்ந்து 130.60 அடியாக உள்ளது . அணைக்கு விநாடிக்கு 34,416 கன அடித்தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது . 156 அடி கொள்ளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்ட்டம் காலை இருந்ததைவிட 10 அடி உயர்ந்து மாலையில் 150.26 அடியாக உள்ளது. அணைக்கு விநாடிக்கு 24,725 கன அடித்தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. எனவே இரண்டு அணைகளில் இருந்தும் மொத்தம் 24,725 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும் மழை நிலவரத்தை பொறுத்து திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு கூடவும் வாய்ப்பு உள்ளது. எனவே தாமிரபரணி ஆற்றின் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கரையோரத்தில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குற்றாலம் அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவி , பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் வெள்ள நீர் அதிகமா விழுவதால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கப்பட்டுள்ளது.