நெல்லை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை….

தென் மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் ஆகிய 5 மாவட்ட மலைப்பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்ததில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் தலா 4 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

மேலும், கோவை மாவட்டம் சின்னக்கல்லார், காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, தேனி பெரியாறு உள்ளிட்ட பகுதிகளில் 3 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது
இதையடுத்து, நீலகிரி மாவட்டம் தேவாலா, நடுவட்டம், கோவை மாவட்டம் பொள்ளாச்சி, திருவள்ளுவர் மாவட்டம் சோழவரம், தாமரைப்பாக்கம் உள்ளீட்ட பகுதிகளில் தலா 2 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதியில் மாலை அல்லது இரவு நேரத்தில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும், மேலும், அதிகப்பட்சமாக 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் பதிவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.